Home Local news காதல் முறிவால் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவன்

காதல் முறிவால் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவன்

மொனராகலை – தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியராவ பல்லேவெலபெத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் க.பொ.த உயர்தர மாணவனான கே.ஜி.அகில டில்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

காதல் முறிவினால் மனமுடைந்து குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இது தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.