Home Cinema கமல் நடித்த “விக்ரம்” படத்தில் ஒளிந்திருக்கும் மற்றொரு டாப் ஹீரோ.? அட இவருமா வைரலாகும்...

கமல் நடித்த “விக்ரம்” படத்தில் ஒளிந்திருக்கும் மற்றொரு டாப் ஹீரோ.? அட இவருமா வைரலாகும் தகவல்

உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம். படத்தை சிறப்பாக எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு சிறந்த நடிகர்களை பலரை ஒரே படத்தில் இருந்து போட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அந்தவகையில் கமலுடன் இணைந்து நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பல டாப் நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் பாடல்கள் தொடங்கி டிரெய்லர் வரை அனைத்தும்.

சிறப்பாக இருந்த காரணத்தினால் இந்த படத்தை பார்க்க ரசிகர்களும் மக்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு முன்பாக தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள படக்குழு தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்ட வண்ணமே இருக்கிறது அதாவது விக்ரம் திரைப்படத்தில் சூர்யா சின்னதாக கேமியோ ரோலில் வந்து போவார்.

ஆனால் அந்த சீன் ஒவ்வொன்றும் மிரட்டும் வகையி்ல் இருக்கும் என கூறியது. அதிகபட்சமாக நடிகர் சூர்யா பத்து அல்லது பதினைந்து நிமிடம் தான் வந்து போவார் என தெரியவருகிறது. இவரைப் போலவே இந்த படத்தில் ஒரு சில நடிகர்கள் இன்னும் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது அந்த வகையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனும்..

ஒரு சின்ன ரோலில் வந்து போக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை லோகேஷ் கனகராஜ் வாய் திறந்தால் மட்டுமே அது தெரியும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான ரிப்போர்ட் இதோ !!
Next articleஆஸ்கார் விருதை பெற்ற பிரபல இசையமைப்பாளர் தீடீர் மரணம் !! கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்