Home திருகோணமலை செய்திகள் கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக குமணன் நியமனம்.

கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக குமணன் நியமனம்.

கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக உதயகுமாரன் குமணன் நியமனம்.
கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக உதயகுமாரன் குமணன் நியமிக்கப்படுள்ளார். 2021 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்டதன் பின்னர் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை மூன்றாம் தர உத்தியோகத்தரான இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கணக்கிடலும் முகாமைத்துவத்தில் ஆரம்ப பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இவர் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கத்து.இன்று(14) கந்தளாய் பிரதேச செயலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன் போது கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரியும் உடனிருந்தார்.