கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய வைத்தியர் பிரியந்தினி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாக தொடர்வார்.
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கவனித்து வந்தார்.
பொதுஜன பெரமுனவின் பிரதேசசபை வேட்பாளரான கோபால் என்பவர் தொலைபேசியில் அவரை மிரட்டியதை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைத்தியர் பிரியந்தினி கவனத்தையீர்த்தார்.
அதன்பின்னர் தன் மீதான கவனக்குவிப்பில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது.
அத்துடன், சிறிதரன் எம்.பியுடனான தொலைபேசி உரையாடல் வெளியான விவகாரத்திலும், அவர் மீது நடவடிக்கையெடுக்க கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பிரியந்தினி, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.