Home CRIME NEWS கடுமையான நடவடிக்கை!! 3 பௌசர்களின் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்

கடுமையான நடவடிக்கை!! 3 பௌசர்களின் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்

கொழும்பில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கையில் நடுரோட்டில் எரிபொருள் பாரவூர்தியை நிறுத்தி பெண் ஒருவர் தனது காருக்கு எரிபொருள் வாங்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

பௌசர் போக்குவரத்து குழுவினர், தவறான மற்றும் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது வேதனையை வெளிப்படுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஐ.ஓ.சி அறிவித்துள்ளது.

ஐ.ஓ.சி எரிபொருள் பௌசரில் இருந்து காரொன்றுக்கு பெற்றோல் கேன்களை வழங்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியான நிலையிலேயே இந்த அறிவிப்பை ஐஓசி வெளியிட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை!! 3 பௌசர்களின் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்களால், உடன் அமுலுக்கு வரும் வகையில் 3 எரிபொருள் பௌசர்களின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக எரிபொருளை இறக்கியதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட 3 சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்களை தங்களது கவனத்துக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ். நகரில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது
Next articleபெட்ரோல் பவுசரில் இருந்து எடுக்கப்படவில்லை ! நடந்தது இதுதான் ! காணொளி தொடர்பில் பவுசர் உரிமையாளரின் விளக்கம்