Home Local news கஞ்சா வைத்திருந்த சகோதரர்கள் சிக்கினர்; யாழில் சம்பவம்.

கஞ்சா வைத்திருந்த சகோதரர்கள் சிக்கினர்; யாழில் சம்பவம்.

யாழ்.புன்னாலைக்கட்டுவன் – காளியாவத்தை பகுதியில் 23 மற்றும் 36 வயதான சகோதரர்கள் இருவர் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புலனாய்வு பிரிவினரும் – பொலிஸாரும் இணைந்து இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கஞ்சா வைத்திருந்த சகோதரர்கள் சிக்கினர்; யாழில் சம்பவம்.

இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கஞ்சாவினை சிறு சிறு பொதிகளாக கட்டியும், வேறொரு பையில் உதிரியாகவும் அதனை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை; சாடிய சாணக்கியன்
Next articleஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பதற்றம்! – அதிபர் – ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி