Home Cinema ஓஹோ இது தான் அதுவா !! அஜித்திற்கு கொக்கி போடும் சுதா கொங்கரா !! ஒகே...

ஓஹோ இது தான் அதுவா !! அஜித்திற்கு கொக்கி போடும் சுதா கொங்கரா !! ஒகே சொல்லுவாரா அஜித் !!வைரலாகும் தகவல் இதோ !!

சுதா கொங்கரா இயக்கத்தில் கேஜிஎஃப் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘கேஜிஎஃப் அத்தியாயம் 2’ படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரிகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் 14) வெளியாகிறது. உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் நான்கு நாட்களில் ரூ.546 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் 1000 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோம்பேஜ் அதன் KGF 1 & 2 படங்களின் மூலம் இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது

உலகம் முழுக்க ஒரு இந்திய படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனில் தற்சமயத்துக்கு அது கேஜிஎஃப் படத்தைப் பற்றிதான் இருக்கும். அந்த அளவுக்கு உலகம் முழுக்க சென்றடைந்துள்ளது கேஜிஎஃப் சாப்டர் 2. முதல் படத்தை விட பன்மடங்கு பிரபலத்தை பெற்றுள்ளனர் படமும் அதில் பணிபுரிந்தவர்களும். இயக்குநர் நீல் பிரசாந்த் மற்றும் கதாநாயகன் யஷ் ஆகியோரின் மார்க்கெட் வேல்யூ வேற லெவலுக்கு எகிறிக் கிடக்கிறது. இந்நிலையில் கேஜிஎஃப் படத்தை எடுத்த Hombale Films நிறுவனம் தனது அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துரோகி, இறுதிச் சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சுதா கங்கராதான் தங்களது அடுத்த பட இயக்குநர் என்கிற மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது பட நிறுவனம். அப்படியானால்?

ஆம் நீங்கள் நினைத்தது போலவே நாங்களும் நினைக்கிறோம். சூரரைப் போற்று படத்தில் அப்படியே ஒரு உண்மைக் கதையை எடுத்துக் கொண்டு மாஸாக திரைப்படத்துக்கு ஏற்றவாறு கதை அமைத்து எடுத்து காண்பித்தார் சுதா. இப்போது எடுக்கப்படும் புதிய ஸ்கிரிப்ட்டும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. ஆம்.. மிகவும் பிரம்மாண்டமாக.

ஏற்கனவே சுதா கொங்கரா அஜித்தை வைத்து ஒரு பிரம்மாண்ட படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஒருவேளை சுதாவின் அடுத்த படம் அஜித்துடையது என்றால் இந்த அப்டேட் அதற்கானதாக இருக்குமோ என்னவோ. தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர், டான் கேரக்டருக்கு செட் ஆகும் வகையில் பிரம்மாண்டமாக ஒரு கதை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு அஜித்குமார் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை அஜித் இல்லாத பட்சத்தில் மீண்டும் சூர்யாவை வைத்து இந்த படத்தை இயக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

சூர்யாவா அஜித்தா யார் இந்த படத்தில் நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் அந்த அறிக்கையில், “சில உண்மைக் கதைகள் சொல்லப்பட வேண்டியவை. இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து அடுத்த படத்தை அறிவிப்பதில் ஹோம்பேல் பிலிம்ஸ் பெருமிதம் கொள்கிறது. எங்களின் எல்லாப் படங்களிலும் இருப்பது போல் இந்தியாவின் கற்பனையை ஈர்க்கும் கதை இது.”

இந்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் கதாநாயகன் யார்? இசையமைப்பாளர்? என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை இந்த பதிவு மேலும் அதிகரித்துள்ளது. சுதா கொங்கராவின் ‘இருத்தி சுத்து’, ‘சூரரைப் போற்று’ போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியவர் ஜி.வி.பிரகாஷ். எனவே இந்த படத்திற்கும் அவரே இசையமைப்பாளராக இருப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவிஜய்சேதுபதி நடித்த மாமனிதன் படத்தின் ரீலிஸ் தேதி இதோ !!
Next articleஇன்றைய ராசிபலன் 22.04.2022 இதோ !!