முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் வீதியில் நேற்று 16.03.2022 காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
அதிசொகுசு வகனம் ஒன்று வேகமாக பயணித்து உந்துருளியில் சென்றவர்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது .
இதன்போது உந்துருளியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வேகமாக சென்ற அதிசொகுசு வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது,
இந்த விபத்து தொடர்பில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.