லெஜண்ட் சரவணன் நடித்து உருவாகியுள்ள படம் தி லெஜண்ட். ஜெடி – ஜெர்ரி இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியான ஊர்வசி ரெளதலா, கீதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் உருவாகி இப்படத்தின் இரு பாடல்களான மொசலோ மொசலு மற்றும் வாடி வாசல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் மே 29 ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இதற்காக பல வேலைகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்காக 10 பான் இந்தியா நடிகைகள் பங்கேற்கவுள்ளார்களாம்.
தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரெளதலா, ராய் லட்சுமி, யாஷிகா அனந்த், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நிபுர் ஆன்ந்த், டிம்பிள் ஆர்த்தி போன்ர 10 நடிகைகள் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டு குத்தாட்டம் போடவுள்ளார்களாம்.