Home Local news ஏ9 வீதியில் தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

ஏ9 வீதியில் தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நாவுல – அரங்கல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு நேற்று (09) இரவு 10 மணியளவில் மாத்தளை செல்லும் வழியில் கடை ஒன்றுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது தீப்பிடித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் அருகிலிருந்த கடைக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் தீயினால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பதுடன் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகம்பளையில் மாயமான 12 வயது சிறுமி நீர்கொழும்பில் மீட்பு!
Next articleகொலை செய்துவிட்டு காட்டுக்குள் பதுங்கியிருந்த நபர் சிக்கினார்!