Home Local news எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும்!

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும்!

பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். IOC நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியதையடுத்து, எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

IOC விலையேற்றமானது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை அதிகரிக்க வழி வகுக்கும் எனவும், விலைகளை அதிகரிக்காவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 7, 8 நாட்களில் மண்ணெண்ணெய் முதல் அனைத்து எரிபொருட்களின் விலைகளும் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க (ஜே.எஸ்.எஸ்) செயலாளர் ஆனந்த பாலித இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின்சார சபை தேவையான எரிபொருளை வழங்காத காரணத்தினால் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது வறட்சியான காலப்பகுதியில் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொவிட் தொற்றுக்குள்ளாகினாலும் ஒரு வாரத்திற்கு பின்னர் பணிக்கு வர வேண்டும்!
Next article12 வயது சிறுமி மாயம்;