Home Local news எரிபொருள் வரிசையில் காத்திருந்த வைத்தியர் மற்றும் சுகாதார ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

எரிபொருள் வரிசையில் காத்திருந்த வைத்தியர் மற்றும் சுகாதார ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த வைத்தியர் மீதும் சுகாதார ஊழியர் மீதும் காடையர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தெஹியத்தகண்டிய நவமெதகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தமக்கு தேவையான எரிபொருள் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தி அரச வைத்தியசாலைகள் சிலவற்றின் ஊழியர்கள் இன்று சேவையில் இருந்து விலகியிருந்தனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபொலிசார் துரத்தி சென்ற டிப்பரால் விபரீதம்!! 7 பேர் வைத்தியசாலையில்
Next articleஇன்றைய ராசிபலன் – 17/07/2022, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்