Home Local news எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட முறுகல்நிலை: சாரதியை கடுமையாக தாக்கிய காவல்துறையினர்

எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட முறுகல்நிலை: சாரதியை கடுமையாக தாக்கிய காவல்துறையினர்

குருநாகல் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் போது உந்துருளி சாரதியொருவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக பலர் வரிசையில் காத்திருந்த நிலையில், எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வரிசையில் காத்திருந்த உந்துருளி சாரதியொருவர் ஊழியர்கள் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகம் வெளியிட்டு நிலத்தடி கிடங்கைக் காட்டுமாறு முரண்பட்டுள்ளதுடன், குறித்த நபருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிலையத்தில்

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த நபரை கடுமையாக தாக்கியுள்ளதுடன், துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ள காணொளியொன்று சமூகவளைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகிளிநொச்சியில் 19வயது இளைஞரை காணவில்லை! கண்டுபிடித்து தாருங்கள் தாயார் உருக்கமான கோரிக்கை
Next articleபல் வலி சிகிச்சைக்காக சென்ற சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – வீட்டில் இருந்து கதறல்; அதிர்ச்சி புகைப்படம்!