Home Local news எரிபொருளுக்கு காத்திருந்த ஒருவர் இன்றும் உயிரிழப்பு

எரிபொருளுக்கு காத்திருந்த ஒருவர் இன்றும் உயிரிழப்பு

ஹினிதும தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று (11) காலை சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹபரகட, தவலம, படுவத்த பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தகொட பத்திரனகே திலக் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் வாகனத்தில் வந்த அவர், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றுள்ளார்.

காலை 6.30 மணியளவில், எரிபொருள் நிரப்ப வந்த இன்னொருவர், சாரதி இருக்கையில் ஒருவர் சடலமாக கிடப்பதைக் கண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.