தமிழ் சினிமாவில் காதல் கதைகளை எழுதி இயக்குவதில் சிறந்த இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து விடும். அந்த வகையில் தற்போது பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் கார்த்திக் , ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு, உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் இயக்குனர் மணிரத்னத்திடம் கெளதம் மேனன் சில கேள்விகள் கேட்டார் அதற்கு மணிரத்னமும் பதிலளித்தார். அப்போது “பொன்னின் செல்வன் படத்தில் நிறைய நடிகர்களை வைத்து எப்படி சமாளித்தீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த மணிரத்னம் ” அது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லை 100 குழந்தைகளை வைத்து அஞ்சலி படம் எடுக்க தான் மிகவும் சீரமப்பட்டேன்” என கூறியுள்ளார்.