நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்ட்டிகல் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சு நீதி’ படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படம் மே 20, 2022 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், தணிக்கை குழு U/A சான்றிதழுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
Happy to announce #NenjukuNeedhi has been certified U/A by CBFC.#NenjukuNeedhiFromMay20@ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl #RomeoPictures @mynameisraahul @RedGiantMovies_ @Arunrajakamaraj @actortanya @Aariarujunan @dineshkrishnanb @dhibuofficial pic.twitter.com/lLOmBw9GUS
— Boney Kapoor (@BoneyKapoor) May 6, 2022
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், ஆரி அருஜுனன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.
பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, யாமினி சந்தர் அப்துல் லீ, ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் கனா இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.