பிரம்மாண்ட படைப்புகளை படைத்து பாதாள குழியில் கிடந்த நடிகர்களை உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை இயக்குனர் பாலாவை சேரும். சூர்யா, விக்ரம், விஷால்,அதர்வா இவர்கள் எல்லாம் தன் மார்க்கெட்டையே இழந்து நிற்கதியாக இருந்த நிலையில் தானாகவே முன் வந்து இவர்களை வைத்து தரமான படங்களை எடுத்து மீண்டும் இவர்களை தூக்கி கொடுத்தவர் பாலா.
நந்தா, சேது, அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் சூர்யா, விக்ரம், விஷால், அதர்வா போன்ற நடிகர்களுக்கு தன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த படமாகும். எந்த இயக்குனரும் மார்க்கெட்டை இழந்த நடிகர்களை வைத்து படம் எடுக்க தயங்குவார்கள்.ஆனால் பாலா எதையும் யோசிக்காமல் ஒரு பிரம்மாண்ட படைப்பையே அவர்களை வைத்து உருவாக்கினார்.
பாலாவின் இன்னொரு படைப்பான பிதாமகன் படத்தில் நடித்த சங்கீதா அவரை பேட்டியில் சந்தித்தார்.அப்போது சங்கீதா கேட்ட கேள்விகளுக்குநிதானமாகவும் பொறுமையாகவும் பாலா பதில் கூறினார். அப்போது சங்கீதா “ எந்த இயக்குனரும் செய்யாத ஒரு செயலை அந்த நடிகர்களை வைத்துநீங்கள் செய்து முடித்துள்ளீர்கள், நடிப்பே அவ்ளோதான் என்று இருந்த அவர்களை கைத்தூக்கி மேலே கொண்டு வந்துள்ளீர்கள், எப்படி? என்று கேட்டார்.
அதற்கு அவர் காரணம் என்னை பெத்தவங்க தான். என்னை ரொம்ப வெறுத்தாங்க, எந்த மனுஷனிடமும் இல்லாத அனைத்து கெட்டப் பழக்கங்களும்என்னிடம் இருந்தன. அதனால் என்னை வேண்டானு சொல்லிட்டாங்க, தான் ஒரு அனாதையாக் இருப்பதை உணர்ந்தேன், நானாதான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்,இதை வைத்து தான் யாரும் இல்லாதவங்க எப்படி இருப்பாங்கனு எனக்கு தெரியும் அதனால் தான் எல்லாரும் கைவிட்டு போனப்போ நான் அவர்களுக்காகஇந்த படைப்புகளை அளித்தேன் என்று கூறினார். மேலும் குடிப்பழக்கம் சுத்தமாக விட்டு விட்டேன், புகைப்பிடிப்பது மட்டும் இருக்கு இன்னும் கொஞ்சநாள்களில் அதையும் விட்டு விடுவேன் என கூறினார்.