Home Cinema உடல் நலக்குறைவால் ரங்கம்மா பாட்டி பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்.

உடல் நலக்குறைவால் ரங்கம்மா பாட்டி பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்.

வடிவேலு மற்றும் விவேக் போன்ற பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் பல நகைச்சுவை காட்சிகளில் தோன்றிய பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி. எம்.ஜி.ஆர் காலத்தில் சினிமா பயணத்தை தொடங்கிய இவர், தனது இளம் வயதிலேயே பல பிரபல நடிகைகளுக்கு டூப் வேடமிட்டு, இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் உடல்நிலை மோசமாகி காலமானார். இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி வடிவேலு வரை தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்கள் பலருடனும் அவர் நடித்து இருக்கிறார். வடிவேலுவுடன் அவர் நடித்த நாய்க்கடி காமெடி பெரிய அளவில் பேமஸ்.

வறுமையில் வாடி வந்த அவர் தங்க இடம் இல்லாமல் வேறு ஒருவர் இடத்தில் தங்கி இருப்பதாகவும், தனக்கு உதவி செய்யும்படியும் அரசிடம் கடந்த மாதம் தான் கோரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மரணமடைந்து இருக்கிறார்.

ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் பகுதியில் அவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்றே நடைபெற உள்ளது.

ரங்கம்மா பாட்டி சமீபத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் காணப்பட்டார், மேலும் அவர் சம்பாதித்த அனைத்தையும் மோசடி செய்து அவரது மகள்களால் கைவிடப்பட்டதாக ஊகிக்கப்பட்டது. இப்போது நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் ரங்கம்மா பாட்டி தனது கிராமத்திற்குத் திரும்புகிறார்அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.