Home Health and Fitness உடலுறுப்புகளில் வலி வந்ததும் டாக்டரை தேடி போகாமல் இந்த இயற்கை பொருளை தேடி போங்க

உடலுறுப்புகளில் வலி வந்ததும் டாக்டரை தேடி போகாமல் இந்த இயற்கை பொருளை தேடி போங்க

இன்றைய தலைமுறை எந்த வலியையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குதான் இருக்கிறார்கள். அதனால்தான் தலைவலி , வயிறு வலி என கொஞ்ச நேரத்தில் சரியாகக் கூடிய உபாதைகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் வலி நிவாரணி மாத்திரைகளை போட்டுக்கொள்கிறார்கள்.

அது அந்த நேரத்தில் உங்களை வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள உதவுகிறது என்றாலும் அதன் ஆபத்து பெரியதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

2/ 6 வலி நிவாரணி மாத்திரைகளை ஆங்கிலத்தில் அனால்ஜசிக் என்று அழைக்கின்றனர். உயிருக்கே உலை வைக்கக் கூடிய இந்த மாத்திரைகளை இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வலி நிவாரணி மாத்திரைகளை ஆங்கிலத்தில் அனால்ஜசிக் என்று அழைக்கின்றனர். உயிருக்கே உலை வைக்கக் கூடிய இந்த மாத்திரைகளை இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாம் உண்ணும் உணவுப் பொருட்களே இயற்கை வலி நிவாரணிகள் என்பது ஆச்சர்யமான விஷயம். அவற்றைப் பற்றியே இக்கட்டுரை.

பல் வலி

பல் வலி என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் வாட்டி வதைக்கும் உடல் உபாதை. அதற்கு கிராம்பு சிறந்த நிவாரணியாகும்.

பற்களில் வலி உள்ள இடத்தில் கிராம்பை பொடி செய்து தடவ வலி குறைவதை உணரலாம். கிராம்பிற்குப் பதில் கிராம்பு எண்ணெயையும் வலி உள்ள இடத்தில் தடவலாம்.

காது வலி

காது வலி ஏற்பட்டால் வெள்ளைப் பூண்டினைப் பயன்படுத்தலாம். வெள்ளைப் பூண்டு நுண்ணுயிர்களின் செயல்பாடுகளைக் குறைப்பதோடு அவற்றை அழிக்கவும் செய்யும்.

இரத்தக் காயம்

இரத்தக் காயம் மற்றும் நாள்பட்ட வலிக்கு மஞ்சள் சிறந்த நிவாரணியாகும். சிறிய மற்றும் நடுத்தர இரத்தக் காயம் ஏற்பட்டதும், சுத்தமான மஞ்சளை பொடி செய்து காயத்தில் தடவும் போது காயம் சீழ் வைக்காமல் இருக்கும்.

செரிமானம்

நல்ல செரிமானத்திற்கு அன்னாசிப் பழம் (பைனாப்பிள்) மற்றும் பப்பாளிப்பழம் உதவும்.

உணவு உண்ட பின்பு கிராம்பினை வாயில் போட்டு சுவைத்தால், அமிலத்தன்மை அதிகரிப்பால் உண்டாகும் நெஞ்செரிச்சலைத் தவிர்க்கலாம். எனவேதான் சாப்பிட்டிற்கு பின்பு உண்ணும் பீடாக்களில் கிராம்பினை வெற்றிலையில் குத்தி வைத்திருப்பார்கள்.

நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் செரிமானமின்மை ஆகியவற்றிற்கு காலை உணவிற்கு முன்பு பாதி கப் அளவிற்கு வேக வைத்த பீட்ரூட்டை உண்டு நிவாரணம் பெறலாம்.

இஞ்சி வயிற்றுக்கு சிறந்த உணவுப் பொருளாகும். அசௌரியமான வயிற்று வலிக்கு இஞ்சியையே நிவாரணப் பொருளாக நம் முன்னோர்கள் பராம்பரியமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

சளி, இருமல், தலைவலி

கோடை வெப்பத்தினால் உண்டாகும் தலைவலிக்கு தர்பூசணி சிறந்த தீர்வாகும். கோடையில் தினமும் தர்பூசணி உண்டால் நீர்இழப்பையும் தவிர்க்கலாம்.

சாதாரண சளி, இருமல், தொண்டைப் புண், தொண்டை கரகரப்பு ஆகியவற்றிற்கு, இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றினை கலந்து பருக வேண்டும். இது கோழையை அகற்றுவதோடு சளியினால் ஏற்படும் தொந்தரவுகளையும் நீக்கும்.

அன்னாசி பழச்சாறு இருமலுக்கு உண்ணும் சிரப்பினைப் போன்று ஐந்து மடங்கு சக்தி வாய்ந்தது. மேலும் அன்னாசி சாறு சளி மற்றும் காய்ச்சல் உண்டாவதைத் தடுக்கும்.

கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தொடர் இருமல் ஏற்படும்போது, உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேல் உயர்த்தினால் இருமல் கட்டுப்படும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.மாநகரில் சைக்கிள்களைத் திருடியவர் சிக்கினார்
Next articleதுணிக்கடையில் திருடச் சென்றவர் பொம்மையுடன் பாலியல் சேட்டை!