Home முல்லைத்தீவு செய்திகள் இளைஞரை அடித்து அச்சுறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளை கொண்டுசென்ற கும்பல்!

இளைஞரை அடித்து அச்சுறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளை கொண்டுசென்ற கும்பல்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பூவரசங்குளம் பெரியவெளி வாய்க்கால் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை தாக்கி விட்டு உந்துருளியினை அபகரித்து சென்ற சம்பவம் நேற்று 04.05.2022 மாலை பதிவாகியுள்ளது

மாலை வயல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை அழைத்த நால்வர் அவரிடம் பேச்சு கொடுப்பதாக காட்டி விட்டு இளைஞரை தாக்கி விட்டு அவரின் மோட்டார் வண்டியினை எடுத்து சென்றுள்ளதாக குறித்த இளைஞரால் நட்டாங்கண்டல் போலீசில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது

குறித்த சம்பவத்தில் கொம்பறுத்தகுளம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் ஜீவரூபன் என்ற இளைஞரே தாக்குதலுக்குள்ளானவராவார்

இதே வேளை மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பகுதிகளில் மாலை வேளைகளில் வேற்று பிரதேச இளைஞர்கள் குறித்த பகுதிகளிற்கு வருகை தந்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் வீதிகளில் பயணிப்போர் மீதும் தாக்குதல்களை நாடாத்துவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅடித்து கொன்ற பின் நீரோடையில் வீசப்பட்ட இளைஞன் சடலம் மீட்பு! வாடியில் இருந்த பணத்தை திருடினாரா??
Next articleமுல்லைதீவில் குளத்தில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு