Home Local news இறுதி கிரிகைகள்.. எதுவும் நடக்கலாம்.. றம்புக்கணையில் மீண்டும் குவிக்கப்படும் முப்படையினர்.

இறுதி கிரிகைகள்.. எதுவும் நடக்கலாம்.. றம்புக்கணையில் மீண்டும் குவிக்கப்படும் முப்படையினர்.

றம்புக்கணையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் நாளை (22) தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த ஹிரிவடுன்னேவில் இடம்பெறவுள்ளன.

இறுதி கிரிகைகள்.. எதுவும் நடக்கலாம்.. றம்புக்கணையில் மீண்டும் குவிக்கப்படும் முப்படையினர்.

எவ்வாறாயினும் நாளை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ள பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரின் ஆதரவை பெற்றுத்தருமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, 2022.03.21 இல. 2272/10 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 (1) வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் கேகாலை மாவட்டத்தில் பொது அமைதியை பேணுவதற்காக முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இறுதி கிரிகைகள்.. எதுவும் நடக்கலாம்.. றம்புக்கணையில் மீண்டும் குவிக்கப்படும் முப்படையினர்.

கடந்த 19ஆம் திகதி றம்புக்கணை பொலிஸ் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தியபோது குறித்த நபர் உயிரிழந்தார்.

அதன்படி, இந்த மரணம் குறித்து பாரபட்சமற்ற முழுமையான விசாரணையொன்றை மேற்கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஐ.ஜி திலகரத்னவை நியமித்தார்.

இதன்படி, விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்து மூன்று நாட்களுக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 22/04/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.
Next articleறம்புக்கனையில் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த பொலிஸார்