Home Cinema இரவோடு இரவாக போனை ஸ்விச் ஆஃப் செய்து அப்ஸ்காண்ட் ஆன சிவகார்த்திகேயன்; நடந்து என்ன ?...

இரவோடு இரவாக போனை ஸ்விச் ஆஃப் செய்து அப்ஸ்காண்ட் ஆன சிவகார்த்திகேயன்; நடந்து என்ன ? வைரலாகும் உண்மை தகவல் !

சிவகார்த்தி கேயன் நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான டான் படம், மே மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியான டான் படம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எஸ்.ஜே.சூரியாவுடன் முதன் முறையாக இணையும் சிவகார்த்தி கேயன் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படமான இந்த டான் படத்திற்கு, அனைவரும் வெகு ஆர்வமாக காத்து வந்தனர்.

அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் என்ற படம், கல்லூரியில் நடக்கும் கூத்துகளைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது. பிரியங்கா அருள் மொழி, எஸ் ஜே சூரியா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், சூரி, சமுத்திரக்கனி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே கொண்டுள்ள இந்த படம் இன்று வெளியானது. காதல் கலந்த கல்லூரி நாடகமான இப்படத்தில் சிவகார்த்தி கேயன் குறும்புக்காரனாக நடித்திருக்கிறார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா பூமிநாதன் என்ற பேராசிரியராகவும், அவருக்கு எதிராக கல்லூரி மாணவர்களின் தலைவராக சிவகார்த்தி கேயனும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்த நிலையில், படத்தின் ட்ரெயிலரும் வெளியான ஒரு மணி நேரத்திலேயே, இது யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. இது சிவகார்த்தி கேயன் படங்களுக்கு ஒரு புதிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. லைகா தயாரிப்பில் வெளியான இந்த படம் மே 13ம் தேதியான இன்று, தியேட்டர்களில் வெளியானது.

50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் காப்பி, நடிகர் சிவ கார்த்தி கேயனின் எஸ். கே. தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்தி கேயனின் சம்பளம் 25 கோடி ரூபாய் எனக் கூறப்படும் நிலையில், லைகா நிறுவனம், 10 கோடிகளுக்கும் மேலாக சிவகார்த்தி கேயன் சம்பளத்தில் பாக்கி வைத்துள்ளது. தமிழ் நாட்டின் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றது. மேலும், டான் படத்தை வெளிநாட்டிற்கு சரியான நேரத்திற்கு அனுப்ப முடியாததால் லைக்கா நிறுவனத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தனை பிரச்சனைகள் ஏற்பட்டதால், சிவ கார்த்தி கேயன் தனது போனை ஸ்விச் ஆஃப் செய்து விட்டாராம்.

பயந்து போன லைகா, பின் சிவகார்த்தி கேயனுக்கு கொடுக்க வேண்டிய மீதி சம்பளத்தை செட்டில் செய்ததாகக் கூறப்படும் நிலையில் சிவ கார்த்தி கேயன் தனது போனை ஆன் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம், முன்பு சிவ கார்த்தி கேயன் சிக்கிக் கொண்ட கடன் பிரச்சனைகள் தான் எனக் கூறப்படுகிறது. கொரோனா காலங்களில் பல சிக்கல்களை சந்தித்து தனது தயாரிப்பு நிறுவனம் பல சிக்கல்களை சந்தித்திருந்ததாகவும், பிரம்மாண்டமாக உருவாகிய அயலான் படத்தாலும் பல கடன் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். பின் டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்தே கொஞ்சம் கொஞ்சமாக கடன் பிரச்சனைகளில் இருந்து வெளியேறியதாகவும் கூறினார்.

இதுபோன்ற சூழலில் சிவ கார்த்தி கேயன் மீண்டும் ஒரு புதிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை என்ற காரணத்தாலும், லைகா மீதான நம்பிக்கையின்மை காரணமாகவும் டிப்படி ரொஉ செயலை செய்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவ்லகள் வெளியாகியுள்ளன.

பொதுவாகவே சிவகார்த்தி கேயன் படம் என்றாலே, அது கதைக் களத்தைத் தாண்டி, இளைய ரசிகர்களை ஈர்க்கும் ஆடல், பாடல், நல்ல ஸ்டண்டுகள் மட்டுமின்றி, ரொமான்ஸ் மற்றும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில், இந்த படத்தின் ப்ரைவேட் பார்ட்டி பாடல் மூலம், ஒரு பக்கா பாக் கேஜ் இந்த படத்தில் காத்திருக்கிறது என்பது நன்றாக தெரிந்தது. இன்று நல்ல விதமாக வரவேற்கபட்டு வரும் டான் படம், டாக்டர் படம் அளவிற்கு வசூலைப் பெறுமா என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.