Home Local news இரவாகியும் வீடு திரும்பாத இளம் குடும்பஸ்தர் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

இரவாகியும் வீடு திரும்பாத இளம் குடும்பஸ்தர் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை மீட்கப்பட்ட குறித்த குடும்பஸ்தர் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் சண்முகபுரம் நோக்கிச் சென்றிருந்த நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இன்று அதிகாலை வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் சுப்பிரமணியம் கண்ணன் (வயது 33) என்பவரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமன்னாரில் வீடு நோக்கி பயணித்த இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
Next articleவரணியில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகையில்  துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்; 5 விசேட அதிரடிப்படையினர் கைது