Home இன்றைய ராசிபலன்கள் இன்றைய ராசி பலன் – 16.02.2022

இன்றைய ராசி பலன் – 16.02.2022

பிலவ வருடம் மாசி 04ஆம் தேதி பிப்ரவரி 16, 2022, புதன்கிழமை. பௌர்ணமி இரவு 10.26 மணிவரை அதன் பின் பிரதமை. ஆயில்யம் பகல் 03.14 மணி வரை அதன் பின் மகம். சந்திரன் இன்று கடகம்,சிம்ம ராசிகளில் பயணம் செய்கிறார். தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு சாதகமான இடத்தில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மாலைக்கு மேல் மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார். இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். ஆலய தரிசனம் மன அமைதியை ஏற்படுத்தும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் இருந்து இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். எதிர்பாராத விரயங்களால் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். சுப காரியங்களில் சுப செலவுகள் வரும். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் கவனம் தேவை.
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். மாலை வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூர பயணங்களில் கவனம் தேவை.

கும்பம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன் சஞ்சாரம் சாதமாக உள்ளதால் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சுப நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.