Home Astology இன்றைய ராசி பலன் – 14.02.2022

இன்றைய ராசி பலன் – 14.02.2022

பிலவ வருடம் மாசி 2ஆம் தேதி பிப்ரவரி 14, 2022, திங்கட்க்கிழமை,திரயோதசி இரவு 08.42 மணிவரை அதன் பின் சதுர்த்தி, புனர்பூசம் பகல் 11.52 மணி வரை அதன் பின் பூசம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். பண வரவு அதிகரிக்கும். வீடு வாகன பராமரிப்பு செய்யலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். இன்று உத்தியோகஸ்தர்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு இன்றைய தினம் முயற்சி செய்யலாம். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் இருந்த மந்த நிலை நீங்கி அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தவிர்க்கவும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமாக செயல்படுவது நல்லது. இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். ராசியில் ஆட்சி பெற்று அமரும் சந்திரனால் மனதில் உற்சாகம் பிறக்கும். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதால் லாபம் கிடைக்கும்.
இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் கிட்டும். இன்று உங்களின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வருமானம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும். இன்று உறவினர்களால் சுப விரயங்கள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாராத்தில் நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும், பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் ஏற்பட்ட வீண் மனஸ்தாபாங்கள் நீங்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் வெற்றி அடையலாம்.
இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். வேலையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறையும். பணவரவு நன்றாக இருக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். சந்திரன் பார்வை உங்கள் ராசியில் உள்ள சனியின் மீது விழுவதால் கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு நல்ல செய்திகள் வீடு தேடி வரும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் வரும் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்
சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய பிள்ளைகளின் உடல்நிலை பலவீனமாக காணப்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றலாம். வீண் செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு மன நிம்மதியை தரும்.