Home இன்றைய ராசிபலன்கள் இன்றைய ராசி பலன் – 13.02.2022

இன்றைய ராசி பலன் – 13.02.2022

பிலவ வருடம் மாசி 1 ஆம் தேதி பிப்ரவரி 13, 2022, ஞாயிற்றுக்கிழமை. துவாதசி மாலை 06.42 மணிவரை அதன் பின் திரயோதசி. திருவாதிரை காலை 09.27 மணி வரை அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும். இன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடைகளுக்குப் பின் நல்லது நடக்கும். சக நண்பர்களுடன் பேசும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் உற்சாகத்தைக் கொடுக்கும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்.

கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

சிம்மம்
சந்திரன் இன்று லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். நிதி நெருக்கடிகள் நீங்கும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். பேசும் போது கவனம் தேவை.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன்பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.

மகரம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினை நீங்கும். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப் படும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். சுகமான நாளாக அமையும். அம்மாவின் மூலம் திடீர் மருத்துவ செலவுகள் வரும். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.