Home Cinema இன்று வரை திருமணம் செய்யாமல் இருக்கும் முரளியின் தம்பியான வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின்...

இன்று வரை திருமணம் செய்யாமல் இருக்கும் முரளியின் தம்பியான வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் மறுபக்கம் !!

பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு , பைரவா போன்ற படங்களில் வில்லனாக நடித்து தனது மிரட்டு தனமான நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. வடசென்னை படத்தில் சென்டிமெண்ட் கலந்து வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார். விஜய் நடித்த பிகில் படத்திலும் தனது வில்லத்தனத்தை காட்டி அசத்தியிருப்பார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் கூறும் போது “ நான் எப்பவுமே தனியாக தான் இருப்பேன், என்னை சுற்றி நண்பர்களோ உறவினர்களையும் விடமாட்டேன்” என்று கூறினார். அவர் கூறும்போது அதியசயமாக இருந்தது. ஏன் என்று கேட்டதில் தனது நடிப்பு எந்த விதத்துலயும் வாழ்க்கையை பாதித்து விடக் கூடாது என கூறினார்.

பொல்லாதவன் படத்தில் பாலாஜி நடிக்கும் போது பெரும்பாலும் கத்திக் கொண்டு கெட்ட வார்த்தைகளை பேசிக் கொண்டு இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். ஆகையால் நான் அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கும் போது சில சமயங்களில் தூங்கும் போது கூட அந்த வசனங்கள் எல்லாம் வைத்து புலம்பிருக்கேன் என்று கூறினார்.

இந்த விஷயங்கள் எல்லாம் என்னை சுற்றி இருக்கிறவர்களை பாதிக்க கூடாது என்பதற்காகவே நான் இன்று வரை தனியாக தான் இருக்கேன். மேலும் நண்பர்களை பார்க்க வேண்டும் என்றால் நான் எப்பொழுது வர சொல்வேனோ அந்த நேரத்தில் வருவார்கள். அப்பொழுது தான் சந்தித்து பேசிக் கொள்வோம் என கூறினார்.