Home Economy இன்று நள்ளிரவு முதல் எகிறும் எரிவாயு விலை! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் எகிறும் எரிவாயு விலை! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரொன்றின் விலையானது 5175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனால் ஏற்பட்ட தலைவர் வெற்றிடத்திற்கே பொறியியலாளர் விஜித ​ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கவில்லை.

இதனால், இன்றிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்காது.

12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை முன்னைய தொகையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎம்எஸ் தோனி புகழ்ந்து தள்ளிய ரவீந்திர ஜடேஜா! என்ன சொன்னார் தெரியுமா ?
Next articleஇப்படியும் திருடலாமா வீட்டை கொள்ளையடிக்க திருடர்கள் பயன்படுத்தும் அதிர்ச்சி முறை !!