Home Cinema இணையத்தில் வைரலாகும் வினய் யின் புதிய வீடியோ இதோ !!

இணையத்தில் வைரலாகும் வினய் யின் புதிய வீடியோ இதோ !!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வினய்.

உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வினய். இப்படத்தை மறைந்த இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ஜீவா இயக்கியிருந்தார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார் வினய். ஒரு கட்டத்தில் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் துப்பறிவாளன் படத்தில் முதன்முதலில் வில்லனாக நடித்ததே அவருக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்த ‘டாக்டர்’ படத்தில் வினய் வில்லனாக நடித்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சூர்யா கதாநாயகனாக நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் மிரட்டலான வில்லனாக தோன்றினார். இதனால் ஹீரோ வில்லனாக மாறி பாராட்டுகளைப் பெறுகிறார்.

ஆரம்பத்தில் விஸ்கி கம்பெனி, வங்கிகளில் எல்லாம் வேலை செய்ததாகவும், ஆனால் ஒரு அறையில் அமர்ந்து ஒரு அறையில் வேலை பார்த்தபோது, ​​மற்றவர்கள் ஒத்துக்கொள்ளாததால் எப்படியோ அதிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் வினய் குறிப்பிட்டார். சினிமாவுக்கு வந்த அவர் சினிமாவை காதலித்து நடிக்க ஆரம்பித்தார்

இந்நிலையில் வினய் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அவர் ஸ்டைலாக குட்டி விமானம் ஓட்டுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.