Home Cinema அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!

அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!

அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேஜாவு’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் உள்ளது. தற்போது தணிக்கை குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் அருள்நிதி தவிர, மது, அச்யுத் குமார், ஸ்ம்ருதி வேகட், மைம் கோபி, காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘தேஜாவு’ தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிப் படமாகும், இதில் அருள்நிதி ஒரு போலீஸ் அதிகாரியாக, புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் மற்ற த்ரில்லர் படங்களிலிருந்து மிகவும் வித்தியாசமான திருப்பங்களுடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. இப்படத்தில் அருள்நிதியுடன் மதுவும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.