Home Local news அரசாங்கத்திற்கு எதிராக 24 மணிநேர உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார் தம்மிக பிரசாத்

அரசாங்கத்திற்கு எதிராக 24 மணிநேர உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார் தம்மிக பிரசாத்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் தம்மிக பிரசாத் இன்று காலிமுகத்திடலில் 24 மணித்தியால உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

நான் நாளை ( இன்று) ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துகொள்வேன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதிவழங்குமாறும் தற்போதைய பொருளாதார நெருக்கடியினனால் துயரில் சிக்கியுள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தும் விதத்தில் நான் 24 மணிநேர உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிப்பேன் என அவர் நேற்று தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதிவழங்கவேண்டும் என கோரி கடந்தவாரம் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை வரை இடம்பெற்ற பேரணியை தம்மிக பிரசாத் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.