இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்த அதிகபரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில், விறு விறுப்பாக பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இதுவரை 30% படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் படத்திற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் படப்பிடிப்பு தொடங்கி ஒரு மாதம் முடிவடையவுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வலிமை படத்தை போலவே அப்டேட் விடாமல் இருப்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, AK61 படத்திற்கான இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து முடித்துள்ளாராம். பாடல்களும் ரசிகர்களுக்கு பிடித்த வாறு அமைந்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.