அநுராதபுரம்- கெபித்திகொல்லேவ, ரம்பகெபுவெவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதற்றமான நிலையினை அடுத்து கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப் பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
அந்த இடத்தில் திரண்ட பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது பொலிஸாருக்கும் குழுவினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது