இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சின்னத்திரை தொலைக்காட்சிகள் பணியாற்றி பின்னர் வெள்ளித்திரைக்கு இயக்குநராக என்ட்ரி கொடுத்தார். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் கடைசியாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார்.
அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 169 படத்தை இயக்குகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.முதல் இரண்டு படங்களும் சக்கைபோடு போட்டதை தொடர்ந்து அடுத்தடுத்து டாப் நடிகர்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன்.
மேலும் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நெல்சன். இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு மோனிஷா என்ற மனைவியும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் பீஸ்ட்.இப்படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றது. பல இடங்களில் இப்படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.இந்த நிலையில் நெல்சன் ஜாலியாக தன் படக்குழுவினருடன் டூர் சென்றுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வர, ரசிகர்கள் எங்கள் தளபதியை வைத்து இப்படி ஒரு படம் கொடுத்துவிட்டு நீங்கள் மட்டும் சந்தோஷமாக ஊர் சுற்றுகிறீர்களா என திட்டி தீர்த்துவிட்டனர்.