Home Cinema அஜித்தை பின்பற்றும் விஜய் !!அதுவும் எதில் தெரியுமா ?நீங்களே பாருங்க புரியும்

அஜித்தை பின்பற்றும் விஜய் !!அதுவும் எதில் தெரியுமா ?நீங்களே பாருங்க புரியும்

தற்போது வரை இணையத்தில் தமிழ் சினிமாவின் பேசுபொருளாக இருப்பது விக்ரம் இசை வெளியீட்டு விழா தான். விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் கமலை இயக்க உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசினார், கமலஹாசன் ஏன் அரசியல் பேசவில்லை என்றவாறு பல பேச்சுக்கள் இன்னும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

vikram

அதில், முக்கியமான ஒரு பேச்சு என்றால் அது தளபதி விஜய் அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வராதது தான். ஒரு சில இணையவாசிகள் விஜய் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து விட்டார், இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் இந்த கலர் சட்டை போட்டுள்ளார் என்றவாறு அடித்து விட்டனர்.

rajini vijay

ஆனால், இறுதி வரையில் விஜய் வரவில்லை என்பதற்கு காரணமாக கூறப்படுவது என்னவென்றால், விஜய் சமீபகாலமாக தனது பட இசை வெளியீட்டு விழாவில் மட்டும் கலந்து கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். கிட்டதட்ட இது அஜித்தின் ஃபார்முலாதான் என்கிறது திரையுலகம். அஜித் தன்னுடைய பட விழாவுக்கே வரமாட்டார். ஆனால், அஜித் வரமாட்டாரா வரமாட்டாரா என்ற ஏக்கமும், தனது வேலை நடிப்பது மட்டுமே என்கிற குணமும் அவரை இன்னும் அதிகமாக ரசிகர்களிடம் சென்று சேர்த்துவிட்டது என்றே கூறலாம்.

அதையேத்தான் விக்ரம் இசை வெளியீட்டு விழாவிற்கும் விஜய் ஃபாலோ செய்துள்ளாராம். இறுதிவரை விஜய் வருவார் வருவார் என்று எதிர்பார்த்து, பின்னர் எதற்காக விஜய் வரவில்லை என்ற பேச்சு, பேசு பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே விஜய் தற்போது அஜித்தின் ஃபார்முலாவை பின்பற்றி விக்ரம் இசை வெளியீட்டை விஜய் தவிர்த்துள்ளார் என்று சினிமாவட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.