Home Cinema அஜித்திடம் கெஞ்சிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் !! ஒகே சொன்ன அஜித் !! கல்யாணம்...

அஜித்திடம் கெஞ்சிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் !! ஒகே சொன்ன அஜித் !! கல்யாணம் கலகட்டப்போகுது !!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள விக்னேஷ் சிவனின் அடுத்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது, மேலும் இந்த காதல் நாடகம் நல்ல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் இரண்டாவது படமாக இப்படம் உருவாகியுள்ளது, மேலும் அவர் இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள் என்பதும் சமீபத்தில் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறினார் என்பது தெரிந்ததே .இந்த நிலையில் இந்த ஆண்டு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் வரும் 28ஆம் தேதி ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரிலீசானதும் திருமண வேலைகள் தொடங்க இருப்பதாகவும் அனேகமாக ஜூன் மாதம் திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விருப்பம் என்னவென்றால் அஜித் முன்னிலையில் அவர்களது திருமணம் நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் கனவு ..அஜித் தாலி எடுத்து கொடுத்து திருமண வாழ்க்கையை தொடங்கி வைக்கவேண்டும் இதற்கு அஜித்தை நாடியுள்ளார் நயன்தாரா .அஜித்தும் பண்ணிட்டா போச்சு என்று கூற இது தற்போது வைரலாகி வருகிறது ..

நயன்தாராவின் சொந்த ஊரில் தான் திருமணம் நடைபெறும் என்றும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு ‘அஜித் 62’ பட வேலைகளை தொடங்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த படத்தில் நயன்தாரா தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் பிரபலமான கோயில்களுக்கு தவறாமல் செல்வதைக் கண்டறிந்துள்ளனர், மேலும் திருமணத்திற்கு முன்பு ஆசி பெறுவது அவர்களின் திட்டம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசந்தானத்தின் அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா !! வெளியான அப்டேட் இதோ !!
Next articleஇந்த டாப் ஹீரோவுடன் புதிய தமிழ் படத்தில் ஒப்பந்தமான பிரியங்கா அருள் மோகன்?